கோவையில் அசால்ட்டாக பைக் லாக்கை உடைத்து திருட்டு- சிசிடிவி காட்சிகள்

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தின் லாக்கை உடைத்து 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை ஒண்டிப்புதூர் கம்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். வழக்கம் போல நேற்று இரவு வீட்டின் முன்பு தனது வாகனத்தை நிறுத்தி வைத்து இருந்துள்ளார்.

அந்நிலையில் இரவு சுமார் 12:30 மணியளவில் அவரது வீதி வழியே வந்து நோட்டமிட்ட 3 பேர் கொண்ட கும்பல் அவரது வாகனத்தின் லாக்கை உடைத்து வாகனத்தை திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக ஆகாஷ் சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சிசிடிசி காட்சிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கணபதி மாநகரில் புதிய பூங்கா- ஆய்வு மேற்கொண்டு மரக்கன்றை நடவு செய்த மாநகராட்சி ஆணையாளர்…

கோவை: கணபதி மாநகரில் புதிய பூங்கா பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து மரக்கன்றை நட்டு வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட கணபதி மாநகர். 4வது பிளாக் பகுதியில், மாநகராட்சி...

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...