கோவையில் கல்லூரி அருகே மைதானத்தில் கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது

கோவையில் தனியார் கல்லூரி மைதானத்தில் 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதில் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்!!!

கோவையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதை பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து அதிக அளவில் போதை பொருட்கள் படைகள் நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காவல் துறையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல் நாள்தோறும் சிக்கி வருகின்றனர். இருந்த போதும் போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் நேற்று கோவை, சுகுணாபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப்படை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்பொழுது மைதானத்தில் மறைத்து வைத்து இருந்த கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை கைப்பற்றி காவல் துறை நடத்திய விசாரணையில், அருகில் குடியிருந்து எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மிருத்யுஞ்சயரனா , கோவை உடையாம்பாளையம் பகுதியில் சேர்ந்த ஜான் பெட்டர், போத்தனூர் கணேசா புரத்தைச் சேர்ந்த முத்து ஆகியோர் நான்கு பேர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சி

கோவை: ஆதிதிராவிடர் பழங்குடியினர் இளைஞர்களுக்கு இலவச கணினி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்காக இலவச Computer-Aided...

Latest News Coimbatore

Video

கோவையில் பள்ளி பேருந்தை ரிவர்ஸ் எடுக்கும்போது ஏற்பட்ட விபத்து- பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்…

கோவை: சூலூர் அருகே பள்ளிப் பேருந்து ரிவர்ஸ் எடுத்தபோது ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பட்டணம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்குச்...