கோவை: கோவை உட்பட 27 மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடனும், இடி மின்னலுடனும் கனமழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி உட்பட 27 மாவட்டங்களில் இன்று(19.06.2026) கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், தர்மபுரி கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய 27 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னைசென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


