CM சார் நீங்க தான் கெத்து.. TVK வெத்து… ஸ்டாலினிடம் கூறிய சிறுமி!

CM சார் நீங்க தான் கெத்து TVK லாம் வெத்து சார்.. தமிழக முதல்வருக்கு பூங்கொத்தி கொடுத்து வாழ்த்து தெரிவித்த சிறுமியின் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கியது. திமுக, அதிமுக, தவெக, நாதக, ராமதாஸ் – சசிகலா என 5 முனைப் போட்டி நிலவியது.

2026

இதனிடையே தேர்தல் நாளன்று 85% க்கு மேல் வாக்குப்பதிவு நடந்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எஸ்ஐஆர் 70 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகள் நீக்கப்பட்டாலும், மக்கள் ஆவலுடன் ஜனநாயக கடமையை ஆற்றியது பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என மே 4ஆம் தேதி தெரிந்துவிடும். அதற்குள், தவெக தான் ஜெயிக்கும் என அக்கட்சியினரும், அதிமுக, திமுகவுக்கு கடும் போட்டியை தவெக ஏற்படுத்தும் என யூகங்கள் கூறி வருகின்றன.

Advertisement
May 4

தேர்தல் முடிந்த கையோடு முதலமைச்சர் ஸ்டாலின், கொடைக்கானலுக்கு தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க சென்றார். அப்போது செய்தியாளர்கள், திமுகவின் வெற்றி குறித்து கேள்வி எழுப்பிய போது, தம்ஸ் அம்ப் விரலை காட்டி வெற்றி உறுதி என்ற செய்கையை செய்தார்.

இந்த நிலையில் நான்கு நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் வருகை தந்த முதல்வர் இன்று மீண்டும் சென்னைக்கு கிளம்பினார்.

Advertisement
CM

இங்கிருந்து சாலை மார்க்கமாக மதுரை செல்லும் முதல்வர் அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னைக்கு செல்கிறார்.

இந்நிலையில் தங்கும் விடுதியில் இருந்து வெளியே கார் மூலம் வந்த முதல்வர் தங்கும் விடுதி வாசலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுடன் பார்வையிடுவதற்காக வாகனத்தை விட்டு கீழே இறங்கி மக்களுடன் புகைப்படம் எடுத்தும் வாழ்த்துக்களையும் பரிமாறி கொண்டனர்.

Gril Talk with CM

தங்கும் விடுதியில் இருந்து வெளியே வந்த அவர் காரில் இருந்து வெளியே இறங்கி வந்தபோது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவரை சந்திக்க வந்திருந்த சிறுமி CM சார் நீங்க தான் கெத்து TVK லாம் வெத்து சார் என்று தமிழக முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். சிறுமி கூறியது கவனத்தை ஈர்த்துள்ளது.

Amazon Link 1
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட்! பழைய ரீல்ஸின் ஆடியோவை இனி மாற்றலாம்

இன்ஸ்டாகிராம் புதிய 'Replace Audio' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பழைய ரீல்ஸ் மற்றும் வீடியோ பதிவுகளை நீக்காமல், அதிலுள்ள ஆடியோவை மட்டும் மாற்றும் வசதி பயனாளர்களுக்கு கிடைத்துள்ளது.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...