பெரியார் அறிவுலகத்தைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் முறைகேடு? ஆராய்ச்சி மாணவர்கள் புகார்!

கோவை: கோவை பெரியார் அறிவுலகத்தைத் தொடர்ந்து, கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலிலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஆராய்ச்சி மாணவர்கள் பிரேம்குமார் மற்றும் சதீஷ் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் இருவரும் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆய்வுக்கான தகவல்களைச் சேகரிக்கப் பெரியார் அறிவுலகத்திற்குச் சென்றபோது, அங்கிருந்த சில நூல்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததாகத் தெரிவித்தனர்.

Advertisement

குறிப்பாக, அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களைச் சேர்ந்த ஏராளமான புத்தகங்கள் அங்கு இருந்ததாகவும், அவற்றை ஆய்வு செய்தபோது தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்ததைக் கண்டறிந்ததாகவும் கூறினர். இதுதொடர்பான ஆதாரங்களைத் திரட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில், கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்காக வாங்கப்பட்ட ஆங்கில நூல்களிலும் முரண்பாடுகள் இருப்பதாகக் குற்றம்சாட்டினர். தேன்மொழி என்பவரின் பெயரில் மூன்றே நாட்களில் 100-க்கும் மேற்பட்ட நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

நூல்களின் ISBN எண்களையும் நூலகத் துறையின் கொள்முதல் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ஒரே ISBN எண்ணில் வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாகக் கூறினர்.

மேலும், வெளிநாட்டு எழுத்தாளர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சில ஆங்கில அறிவியல் நூல்களின் ஆசிரியர்கள் உண்மையான நபர்கள் அல்ல என்றும், அவற்றின் உள்ளடக்கங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டவை என்றும் தங்களது ஆய்வின் அடிப்படையில் குற்றம்சாட்டினர். இதற்கான சான்றுகளைச் சேகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

பெரியார் அறிவுலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள புத்தகங்களைச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மேலும் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினர். அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது தங்களது நோக்கமல்ல என்றும், ஆதாரங்களின் அடிப்படையில் உண்மைகளை வெளிப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தனர்.

Video

தாங்கள் சேகரித்த தகவல்களை எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் பகிர்ந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே அவர் இந்த விவகாரம் தொடர்பாகக் கட்டுரை எழுதியதாகவும் பிரேம்குமார் கூறினார்.

ஆராய்ச்சி மாணவர்கள் என்பதால் நேரடியாக இந்த விவகாரத்தை வெளிப்படுத்துவதில் அச்சம் இருந்ததாகவும், தங்களது முயற்சி அரசியல் காழ்ப்புணர்ச்சியாகப் பார்க்கப்படக் கூடாது என்பதற்காகப் பெருமாள் முருகன் மூலம் தகவல்களை வெளிக்கொண்டுவந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாகக் கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தாங்கள் சேகரித்த ஆவணங்களை வழங்கியுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தீபாவளிக்கு புது துணி வாங்கிதராததால் வாலிபரில் விபரீத முடிவு

கோவை ராமநாதபுரத்தில் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 20 வயது இளைஞர் உயிரிழந்தார். சம்பவத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...