கோவையில் கோர விபத்து; போதையால் போனது அப்பாவி உயிர்!

கோவை: சரவணம்பட்டியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஐடி ஊழியர் பலியானார். பெண் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மணப்பந்தல் அருகே உள்ள மூங்கில் தோட்டத்தைச் சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் மணிகண்டன் (வயது 32). இவர் கோவையில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

Advertisement

இதற்காக சரவணம்பட்டியில் மணிகண்டன் நண்பர்களுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் மற்றும்அவரது நண்பர்கள் அஜித்குமார் (வயது 28,), சரவணம்பட்டி விமல் ராஜ் (வயது 31) ஆகியோர் இரவு சாப்பிட்டுவிட்டு சரவணம்பட்டி சத்தி ரோட்டில் சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்துள்ளது. தாறு மாறாக ரோட்டில் வந்த கார் அந்த வழியாக வந்த அங்கு உளள பழமுதிர் நிலையம் எதிரேக சாலையை கடக்க நின்ற கணவன் மனைவியான கார்த்திக்-காயத்ரி ஆகியோரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதன் பிறகு கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்பு சுவரில் மோதி பறந்து விழுந்தது. அப்போது ரோட்டில் நடந்து சென்ற மணிகண்டன் விமல் ராஜ் அஜித்குமார் ஆகியவர் மீது கார் கவிழ்ந்தது.

இதில் காருக்குள் சிக்கிக்கொண்ட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
அதோடு கார் முதலில் மோதிய, மோட்டார் சைக்கிளில் கணவருடன் பின்னால் அமர்ந்து பயணம் செய்த சரணம்பட்டி பூம்புகார் நகரை சேர்ந்த காயத்திரி (வயது 27) என்பவரும் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

காயமடைந்த 4 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைக்குப்புற கவிழ்ந்து கிடந்த, காருக்குள் அதை ஓட்டி வந்த சரவணம்பட்டி கீரணத்தம் ரோட்டை சேர்ந்த ஜெயமுருகன் என்பவர் மகன் ஜெயகிருஷ்ணன் ( 21) கழுத்தில் காயத்துடன் வெளியில் வர முடியாமல் போராடிக் கொண்டிருந்தார்.

அவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் விபத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஜெயகிருஷ்ணனை கைது செய்தனர். இவர் அன்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். போதையில் காரை ஓடடி சென்றபோது விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

Recent News

கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவம் சுட்டுப் பிடிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உயிரிழப்பு…

கோவை: கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் கொள்ளை சம்பவத்தில் சுட்டு பிடிக்கப்பட்ட மூவரில் ஒருவர் உயிரிழந்தார். கோவையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நேற்று உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் சுட்டுப் பிடித்த நிலையில்...

Video

Join WhatsApp