மாதந்தோறும் மளிகைப் பொருட்கள் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி – தலைமறைவானவர் கைது!

கோவை : மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்குவதாகக் கூறி கவர்ச்சிகரமான சேமிப்புத் திட்டங்கள் மூலம் பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகத் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை நியூ சித்தாபுதூர் சி.கே. காலனியைச் சேர்ந்தவர் ஜார்ஜ் வில்லியம் (70). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு டாடாபாத் கிழக்கு பவர் ஹவுஸ் ரோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது அங்கிருந்த அலுவலகம் ஒன்றுக்கு ஏராளமானோர் வந்து செல்வதைக் கவனித்தார்.

இதையடுத்து, அந்த அலுவலகத்துக்குச் சென்று விசாரித்தபோது, அதன் உரிமையாளரான கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அகத்தீஸ்வரம்குளத்தைச் சேர்ந்த டேவிட்சன் என்ற நடராஜன் (51) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவர், சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் முதலீடு செய்தால் பல்வேறு சலுகைகள் கிடைக்கும் என்றும் ஜார்ஜ் வில்லியத்திடம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை இலவசமாகப் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஜார்ஜ் வில்லியம், ரூ.8 ஆயிரம் செலுத்தி மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டத்தில் சேர்ந்துள்ளார்.

Advertisement

ஆனால், தவணை முடிந்த பிறகும் டேவிட்சன் உறுதியளித்தபடி அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஜார்ஜ் வில்லியம், சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்குச் சென்று பார்த்தபோது அது பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, டேவிட்சன் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்களிடம் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவானதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜார்ஜ் வில்லியம், இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகக் கூறப்படும் டேவிட்சனைத் தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கோவை காந்திபுரம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், டேவிட்சனை கைது செய்தனர். இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எத்தனை பேர் பணத்தை இழந்துள்ளனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A man was arrested in Coimbatore for allegedly cheating the public of crores of rupees through a scheme promising monthly rice and grocery supplies.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்!” கூச்சலிட்ட பெண் – நகையை விட்டுவிட்டு பைக்கில் தப்பிய மர்ம நபர்!

கோவையில் அதிகாலையில் வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் செயினை பறிக்க முயன்ற மர்ம நபர், அவர் கூச்சலிட்டதால் நகையை விட்டுவிட்டு பைக்கில் தப்பிச் சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...