மக்களின் 12 ஆண்டு கால கோரிக்கைக்கு தீர்வு கண்ட எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்

கோவை: கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், 24 வீரபாண்டி ஊராட்சியில் உள்ள ஆனைகட்டி – கொண்டனூர் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையை தூர்வார வேண்டும் என்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் 12 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.

கொண்டனூர் கிராமத்தில் க.ச. எண் 723-ல் அமைந்துள்ள இந்த தடுப்பணை, 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக முறையான பராமரிப்பு மற்றும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படாததால், தடுப்பணையில் அதிகளவில் வண்டல் மண் தேங்கி, நீர்த்தேக்க திறன் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் மழைநீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், விவசாயம், கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கான நீர் தேவையும் பாதிக்கப்பட்டது.

Advertisement

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, தடுப்பணையை தூர்வாரி அதன் நீர்த்தேக்க திறனை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ., மேற்கொண்டுள்ளார்.

தடுப்பணை தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நீரை சேமித்து வைக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளுக்கும் நீர் ஆதாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 ஆண்டுகளாக நீடித்து வந்த கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு கொண்டனூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

கோவை வீரபாண்டி ஊராட்சியில் 12 ஆண்டுகளாக நீடித்த தடுப்பணை தூர்வாரும் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு மாதிரி – பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து தீபங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...