TVK வெற்றியை கொண்டாடிய கோவை வழக்கறிஞர்கள்…

கோவை: தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Advertisement

2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. கடந்த கால அரசியலில் திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த முறை தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் பேசு பொருளாக மாறி உள்ளது.

விஜய் வெற்றி பெற்றதை கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் பலரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக கோவை நீதிமன்ற வாயில் முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சி வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நீதிமன்ற நுழைவாயில் முன்பு நீண்ட சரவெடியை வெடித்து கொண்டாடிய அவர்கள் அவ்வழியாகச் சென்ற பொது மக்களுக்கும் வாகன ஓட்டுகளுக்கும் இனிப்புகளை வழங்கி TVK TVK என முழக்கமிட்டு தமிழகத்தின் முதல்வர் விஜய் என்று முழக்கங்களை எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.