கடைசி ஒரு தடவை உங்கள அப்படி கூப்பிடுறேன்… விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி!

உங்களை கடைசி ஒரு முறை அப்படி கூப்பிட்டுக்கொள்கிறேன் என விஜய்க்கு வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Advertisement

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்து 3 ஆண்டுகளான நிலையில் 2026 சட்டமன்ற தேர்தல் தான் தனது குறி என தொடர்ந்து தேர்தல் பணியாற்றினார். ஜனநாயகன் படம் தனது கடைசி படம் என அறிவித்து அரசியலில் தீவிரமாக வேலை செய்தார்.

Vijay

செய்த வேலைக்கு பலனாக தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்துள்ளது. எம்ஜிஆர் பெற்ற வாக்குகளை விஜய் பெற்ற வாக்குகள் உயர்ந்தன.

ஆளுங்கட்சிக்கும் ஆண்ட கட்சிக்கும் பெரும் சவால் கொடுத்த தவெக தலைவர் விஜய் சுமார் 108 இடங்களில் வென்றுள்ளார். முதலமைச்சராக பதவியேற்கும் பணியில் விஜய் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

Advertisement
Vijay Record

இதனிடையே விஜய்க்கு நேற்றில் இருந்தே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் அரசியல் தலைவர்கள் வாழ்த்து சொல்ல, மறுபக்கம் திரைத்துறையில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது மனமார்ந்த வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த உயர்ந்த நிலையை நீங்கள் அடைந்தது மக்கள் அன்பின் மூலம் மட்டுமல்ல; பல்வேறு விமர்சனங்களையும், வெறுப்புகளையும் தாண்டி வந்ததால்தான். அந்த அளவிற்கு எதிர்ப்புகள் இருந்த போதும் நீங்கள் மனம் தளராமல் முன்னேறியது மிகப் பெரிய விஷயம்.”

Advertisement
Vijay Keerthi

அவர் தொடர்ந்து, “இது முழுக்க முழுக்க உங்கள் கடின உழைப்பின் பலன். மக்களிடம் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, உழைப்பு, மற்றும் பேரார்வம் தான் இந்த வெற்றிக்கு காரணம். நான் முன்பே சொன்னது போல, நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, ஒரு உணர்வு. அந்த உணர்வுக்கு இந்த வெற்றி மிகப் பெரிய சான்றாகும். இது உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்,” என்று பாராட்டினார்.

மேலும், விஜய் குறித்து அவர் கூறுகையில், “ஜோசப் விஜய் சார், இந்த வெற்றி நீங்கள் கடினமாக போராடி பெற்றது. இதற்கான முழு தகுதியும் உங்களுக்கே உண்டு. ‘தளபதி’ என்று உங்களை கடைசியாக ஒருமுறை அழைக்கிறேன்… இனி வேறு விதமாக அழைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது,” என்று குறிப்பிட்டார்.

இதன் மூலம், இனிமேல் அவரை ‘முதலமைச்சர் விஜய்’ என்று அழைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பதைக் குறிக்கும் விதமாக கீர்த்தி சுரேஷ் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ஓடிடியில் சுதந்திர தின வருகையாக வரும் ‘பாரத் பாக்ய விதாத்தா’! வரிசை கட்டி நிற்கும் 9 படங்கள்…!

கடந்த இரு தினங்களில் வெளியான மற்றும் அடுத்த வாரம் வெளியாக உள்ள OTT படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்த முக்கிய தகவல்கள் ரசிகர்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.