மது போதையில் கார் ஓட்டி வாகனங்கள் மீது மோதல்! 5 வாலிபர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

கோவை: கோவை நீலாம்பூர் பகுதியில் மது போதையில் அதிவேகமாக கார் ஓட்டி, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற 5 வாலிபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். அப்போது, வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு நிலவியது.

கோவை – கேரளாவை இணைக்கும் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் நீலாம்பூர் வழியாக கேரள மாநிலப் பதிவு எண் கொண்ட கார் ஒன்று சென்றது. அந்த காரில் 5 வாலிபர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மது போதையில் இருந்ததாகவும், காரை அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இயக்கியதாகவும் தெரிகிறது.

Advertisement

அப்போது, நீலாம்பூர் பகுதியில் அவ்வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய பின்னரும் காரை நிறுத்தாமல் வாலிபர்கள் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் சிலர் காரைத் துரத்திச் சென்றனர்.

இருகூர் அடுத்த குளத்தூர் பகுதியில் கார் சென்றபோது, அதனைப் பின்தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் காரை மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து காரை முற்றுகையிட்ட அவர்கள், அதிலிருந்த வாலிபர்களைக் கீழே இறங்குமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மது போதையில் வாகனம் ஓட்டி, பல வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

இதற்கிடையே, தகவலறிந்து அங்கு சென்ற சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியதுடன், காரில் இருந்த வாலிபர்களை அங்கிருந்து அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களைத் தப்பிக்கச் செய்ய முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Video

இதையடுத்து, சம்பவம் நடைபெற்ற பகுதி நீலாம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், அங்கு வந்த நீலாம்பூர் போலீசார் காரில் இருந்த 5 வாலிபர்களையும் வாகனத்துடன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்து பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

மது போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் நபர்கள், வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவமும், அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தால் இரவு நேரத்தில் அங்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...