கோவையில் நள்ளிரவில் தண்ணீர் வாங்கச் சென்ற வாலிபர்களுக்கு பீர் பாட்டில் குத்து: ரவுடி கைது!

கோவை: கோவையில் நள்ளிரவில் கடையில் தண்ணீர் பாட்டில் வாங்கச் சென்ற வாலிபர்கள் இருவரை பீர் பாட்டிலால் குத்திய ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சவுரிபாளையம், கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் நிகில்ராஜ் (23). இவர் சிங்காநல்லூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.

கடந்த 22-ம் தேதி நள்ளிரவு 12 மணியளவில் நிகில்ராஜ், புலியகுளத்தில் உள்ள தனது சகோதரியைப் பார்த்துவிட்டு, உறவினர் ராஜா என்பவருடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

நீலிக்கோணாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக இருவரும் பைக்கை நிறுத்தியுள்ளனர்.

Advertisement

அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், தன்னைப் பெரிய ரவுடி எனக் கூறிக்கொண்டு நிகில்ராஜ் மற்றும் ராஜாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், திடீரென நிகில்ராஜைத் தாக்கியுள்ளார்.

தொடர்ந்து, அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து நிகில்ராஜைக் குத்த முயன்றுள்ளார்.

அதனை நிகில்ராஜ் தடுத்தபோது, அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனைத் தடுக்க முயன்ற அவரது உறவினர் ராஜாவையும் அந்த வாலிபர் பீர் பாட்டிலால் குத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் சத்தம் போட்டுள்ளனர். அவர்களது சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனைக் கண்ட அந்த வாலிபர், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து நிகில்ராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நிகில்ராஜ் மற்றும் அவரது உறவினர் ராஜாவை பீர் பாட்டிலால் குத்தியது உப்பிலிபாளையம் அடுத்த மசக்காளிபாளையம், விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்த சூர்யா என்ற மின்னல் சூர்யா (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Singanallur police arrested a man for allegedly attacking two youths with a beer bottle in Neelikonampalayam, Coimbatore.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மாநகரில் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரம்: வீடு வீடாகச் சென்று மாநகராட்சி ஊழியர்கள் ஆய்வு!

கோவை மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உருமாண்டாம்பாளையம், நஞ்சேகவுண்டன்புதூர் பகுதிகளில் 60-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...