கோவை டி.கே. மார்க்கெட்டில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளி!

கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கரும்புக்கடை, பாத்திமா நகர் முதல் வீதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் (48). இவர் டவுன்ஹால் பகுதியில் உள்ள டி.கே. மார்க்கெட்டில் கடந்த 6 ஆண்டுகளாக சுமைதூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக அபுதாஹிரும், அவரது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் தாயுடன் வசித்து வருகின்றனர். விவாகரத்துக்குப் பிறகு அபுதாஹிர் டி.கே. மார்க்கெட் பகுதியிலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மதுப்பழக்கம் கொண்ட அபுதாஹிருக்கு உடல்நலப் பாதிப்பும் இருந்துள்ளது. கடந்த 20 நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று முன்தினம் இரவு டி.கே. மார்க்கெட்டில் திடீரென ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

Advertisement

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் அபுதாஹிரை பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெரிய கடைவீதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அபுதாஹிரின் உடலைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பதும், உடல்நலப் பாதிப்பு காரணமாக ரத்த வாந்தி எடுத்திருக்கலாம் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அபுதாஹிரின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பெரிய கடைவீதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Police investigate the death of a load worker at TK Market in Coimbatore Town Hall.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது- கோவை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக வெற்றிக் கழகம் அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...