தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது- கோவை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…

கோவை: தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இணைந்து கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையை ரத்து செய்து, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும், 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு நிலுவையில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு, தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டதை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement

மேலும், யானைகள், காட்டுப்பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயப் பயிர்கள் சேதமடைவதாகவும், வளர்ச்சி என்ற பெயரில் ஒரே மாவட்டத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதால் நிலம், நீர், காற்று மாசடைந்து விவசாயமும் மகசூலும் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

காலநிலை மாற்றத்தால் உரிய நேரத்தில் மழைப்பொழிவு கிடைக்காத நிலை, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பிரச்சினைகளையும் சுட்டிக்காட்டினர்.

விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதுடன், கூலி உயர்வும் விவசாயிகளுக்குப் பெரும் சுமையாக இருப்பதாகத் தெரிவித்த விவசாயிகள் இந்த பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை டி.கே. மார்க்கெட்டில் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளி!

கோவை டவுன்ஹால் டி.கே. மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளி அபுதாஹிர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து பெரிய கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...