கோவையில் மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

கோவை: மருத்துவச் சிகிச்சைக்காக வீட்டைப் பூட்டிவிட்டு வேலூருக்குச் சென்ற பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு செங்காலியப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா (48). இவர் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மருத்துவச் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில், அக்டோபர் 29ஆம் தேதி காலை ஷர்மிளாவின் வீட்டில் வேலை செய்து வரும் விஜயா என்பவர், வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடப்பதாகத் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஷர்மிளா உடனடியாகக் கோவைக்குத் திரும்பி வந்து பார்த்துள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

Advertisement

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் இரண்டு செட் தங்கக் கம்மல்கள், யானை முடி மோதிரம், இரண்டு கைக்கடிகாரங்கள், ரூ.20,000 ரொக்கப் பணம், ஒரு வெள்ளிக் குடம், இரண்டு வெள்ளி விளக்குகள் மற்றும் பல்வேறு வெள்ளிப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

வீடு பூட்டப்பட்டிருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஆள் இல்லாத நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து ஷர்மிளா அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

CBSE தேசிய நீச்சல் போட்டி: அன்னூர் நவ பாரத் பள்ளி மாணவிகள் அபார சாதனை!

கோவை அன்னூர் நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளி மாணவிகள், CBSE தேசிய நீச்சல் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...