கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பு பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளது…
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன்படி இந்த மாதத்திற்கான பயிற்சி 07.07.2025 திங்கட்கிழமை அன்று அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர் பயிற்சி நாளன்று பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) (வரி கட்டணம் உட்பட) நேரிடியாக செலுத்த வேண்டும்.
Advertisement

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான பயிற்சி நேரம் காலை 10.00 முதல் மாலை 5.00 மணி வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தை அணுகலாம் அல்லது 0422-6611336, 0422-6611226, 9629496555; 6379298064 மின்னஞ்சல்: pathology@tnau.ac.in. ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தேனீ வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள, பூச்சியியல் துறை சார்பில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. 07.07.2025 திங்கட்கிழமை அன்று அளிக்கப்பட உள்ள பயிற்சியில்
தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல்,
பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல்
தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
Advertisement

இந்த பயிற்சியில் கலந்துகொள்ள விழைவோர், பயிற்சி நாளன்று காலை 9.00 மணிக்கு பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து அடையாள சான்று சமர்ப்பித்து பயிற்சிக் கட்டணம் ரூ.590/- (ரூபாய் ஐநூற்று தொண்ணூறு மட்டும்) நேரிடியாக செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும்.
இதற்கான பயிற்சி நேரம்: காலை 9.00 முதல் மாலை 5.00 மணி வரை ஆகும்.
மேலும் விபரங்களுக்கு , வேளாண் பூச்சியியல் துறை, தொலைபேசி: 0422- 6611214,
entomology@tnau.ac.in மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.