தங்கம் விலை தொடர்ந்து உயர்வு | Gold rate today

Gold rate today: தங்கம் விலை இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று பவுனுக்கு ரூ.320 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த வாரம் சரிவைச் சந்தித்து வந்த நிலையில்இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்து அதிகரிக்கத் தொடங்கியது.

Advertisement

கடந்த 30ம் தேதி (திங்கட்கிழமை) ஒரு கிராம் தங்கம் (22 காரட்) ரூ.8,930க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஜூலை 1ம் தேதி கிராமுக்கு ரூ.105 அதிரடியாக உயர்ந்தது. நேற்று மீண்டும் கிராமுக்கு ரூ.45 அதிகரித்தது.

அதன்படி, ஜூலை 2ம் தேதி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.9065க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனிடையே இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இன்று கிராமுக்கு ரூ.40ம் ஒரு பவுனுக்கு ரூ.320 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,105க்கும், ஒரு பவுன் ரூ.72,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

18 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.7515க்கும், ஒரு பவுன் ரூ.60,150க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.121க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,21,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவை ஆட்சியர் கொண்டாடிய பொங்கல் விழா- களைகட்டிய அலுவலகம்…

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு...
Join WhatsApp