அசத்திய மாவட்ட போலீஸ்; நேரில் சந்தித்து வாழ்த்திய எஸ்.பி!

கோவை: கோவை மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பிடித்த கோவை மாவட்ட ஆயுதப்படை அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரில் சந்தித்துப் பாராட்டினார்.

கோவை மாநகர காவல் துறை தொடங்கப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு போட்டிகள் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

இதன் ஒருபகுதியாக, போலீசார், பொதுமக்கள் இடையே நல்லுறவை அதிகரிக்கும் முயற்சியாக கிரிக்கெட் போட்டியும் நடத்தப்பட்டது.

இதில் 16 காவல் துறையினர் அணியும், 16 பொதுமக்கள் அணியும் என மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டன. இதன் இறுதிப்போட்டி சரவணம்பட்டியில் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.

Advertisement

இதில், கோவை மாவட்ட ஆயுதப்படை அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்து கோப்பையை வென்றது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கோவை மாவட்ட ஆயுதப்படை கிரிக்கெட் அணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Advertisement

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

காதல் தோல்வி… மன உளைச்சல்: கோவையில் 18 வயது கல்லூரி மாணவர் விபரீத முடிவு

கோவையில் ஒருதலைக் காதல் தோல்வி மற்றும் குடும்பச் சூழலால் மன உளைச்சலில் இருந்த 18 வயது இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.