சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் கார் மோதி முதியவர் உயிரிழப்பு!

கோவை : கோவை சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்த 61 வயது முதியவர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை மதுக்கரை மரப்பாலம் ராஜேஷ்வரி நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (61). இவர் கடந்த 11-ம் தேதி பாலக்காடு மெயின்ரோட்டில் உள்ள சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணகுமார் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்தைப் பார்த்த அப்பகுதி மக்கள், காயமடைந்த கிருஷ்ணகுமாரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து மேற்கு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விபத்தில் சம்பந்தப்பட்ட கார் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலக்காடு மெயின்ரோட்டில் வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் நிலையில், சுகுணாபுரம் மைல்கல் பகுதியில் நிகழ்ந்த ந்த விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...