கோவையில் பார்க்கிங்கில் இருந்த வாகனங்களின் சீட்டை கிழித்த நபர்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: டவுன்ஹாலில் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களின் இருக்கைகளை சேதப்படுத்தும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை மாநகர் டவுன்ஹால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களின் சீட்டுகளை, மர்ம நபர் ஒருவர் பிளேடால் கிழித்துச் சேதப்படுத்தும சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

​கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான வணிகப் பகுதிகளில் ஒன்றாக டவுன்ஹால் பகுதியில் துணிக்கடைகள் அருகே இருசக்கர வாகனங்கள் பார்க்கிங் பகுதிகளில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர். இந்நிலையில், அங்கு உள்ள பார்க்கிங் ஏரியாவில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த பைக்குகளின் சீட்டுகளை மர்ம நபர் ஒருவர், தனது கையில் வைத்து இருந்த கூர்மையான பிளேடால் கிழித்து சேதப்படுத்தி விட்டு, ஒன்றும் தெரியாதது போல சென்றுள்ளார்.

​பின்னர் அங்கு வந்து பார்த்த வாகன ஓட்டிகள், பைக்குகளின் சீட்டுகள் அனைத்தும் கிழிந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, மர்ம நபர் ஒருவர் இதனை செய்தது பதிவாகி இருந்தது. அதனை கண்டு அதிர்ச்சியடைந்த வாகனங்களின் உரிமையாளர்கள் அங்கிருந்து காவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர் அந்த நபர் யார்? அவரை கைது செய்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றால் அவரது வீட்டாரிடம் இது குறித்து தெரிவித்து அவரை வீட்டிலேயே வைத்திருக்கவோ குடும்பத்தினர் யாரும் இல்லாத பட்சத்தில் காப்பகத்தில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

​இந்த அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது.


Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...