கோவை அருகே சாலையில் கவிழ்ந்த லாரி…

கோவை: கோவை, வாளையார் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பினார்.

Advertisement

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையாக கோவை- வாளையார் எல் அண்ட் டி தேசிய நெடுஞ்சாலை விளங்கி வருகிறது. கோவை வாளையார் சாலையில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சரக்கு லாரிகள் மற்றும் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கேரளா பதிவெண் கொண்ட சரக்கு லாரி ஒன்று நேற்றிரவு திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது.

வாளையார் சோதனைச் சாவடி அருகே சென்ற போது அந்த லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பலமாக மோதி, கவிழ்ந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு மற்ற வாகன ஓட்டிகள் ஓடி வந்து ஓட்டுனர் மீட்டனர்.

Advertisement

ஓட்டுநர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். லாரி கவிழ்ந்த நேரத்தில் பின்னால் மற்ற வாகனங்கள் எதுவும் மிக நெருக்கமாக வராததால், ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்தத க.க.சவாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, லாரியை அப்புறப்படுத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...