கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் விழிப்புணர்வு…

கோவை: கோவையில் கல்லூரி மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மாவட்ட காவல்துறை சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு இணையவழி குற்றங்கள் மற்றும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் ரெட்டி அறிவுறுத்தலின்படி, மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் கல்லூரியில் இந்நிகழ்ச்சியை நடத்தினார். இதில் சுமார் 350 மாணவிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஆன்லைன் முதலீட்டு மோசடி, கல்வி உதவித்தொகை மோசடி, டிஜிட்டல் கைது, போலியான வேலைவாய்ப்பு, திருமண இணையதள மோசடி, வங்கி அட்டை மோசடி, கடன் செயலிகள் மற்றும் போலி வாடிக்கையாளர் சேவை எண்கள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், போலியான APK கோப்புகள் மற்றும் KYC விவரங்களைப் புதுப்பிப்பதாகக் கூறி நடைபெறும் மோசடிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

செல்போன்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல், சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள், மொபைல் கேம்களை அதிகமாக விளையாடுவதால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இணையவழி மிரட்டல்கள் குறித்தும் மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அறிமுகமில்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், OTP மற்றும் PIN எண்களைப் பகிரக்கூடாது என்றும், சந்தேகத்திற்குரிய இணைப்புகள் மற்றும் செயலிகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

இணையவழி நிதி மோசடிகளால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்புகொள்ளவும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...