கோவையில் கொலுவில் நோய் தடுப்பு விழிப்புணர்வு…

கோவை: கோவையில் தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வு கொலு கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பாரதி காலனி சாலையில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘NCD கொலு’ கண்காட்சியை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, தொடங்கி வைத்தார்.

Advertisement

கோவை மாநகராட்சியின் 33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்குச் சுகாதார சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், குடல் பை தொடர்பான நோய்கள், மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தக் கொலு அமைக்கப்பட்டுள்ளது.

தினமும் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, யோகா மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது, ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைப் பின்பற்றுவது, தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்ப்பது போன்ற அறிவுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், புகையிலைப் பொருட்கள், மதுபானங்கள், அதிக உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட உணவுகள், அதிக எண்ணெய் பயன்பாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் விளக்கப்பட்டுள்ளது.

Advertisement

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு முறையான தடுப்பூசிகளைச் செலுத்துதல், இளம் பெண்களுக்கான HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றால் ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளைத் தடுக்கவும் பொதுமக்கள் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு பயனடைய வேண்டும் என மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர், சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றம்…

கோவை: விடுமுறை அறிவிப்பு தெரியாமல் பெரியார் அறிவுலகத்தை காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். விடுமுறை அறிவிப்பு தெரியாமல் கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்தைக் காண வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி...

Video

டீக்கடையில் புகுந்த கார்- பெண்கள் காயம்- கோவையில் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை: கணியூர் டோல்கேட் அருகே டீக்கடையில் புகுந்த அதிவேக காரால் 2 பெண்கள் படுகாயம் அடைந்த, சி.சி.டி.வி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்து உள்ள கணியூர்...