கோவையில் வீட்டில் வெடித்த சிலிண்டர்… மக்கள் அதிர்ந்துபோன நொடிகள்… வீடியோ காட்சிகள்!

கோவையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்ததால் அலறிய பொதுமக்கள். வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ்.

Advertisement

இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குடும்பத்துடன் வீட்டைப் பூட்டி விட்டு மாணிக்கராஜ் வெளியே சென்று உள்ளார். அப்பொழுது இரண்டாவது மாடியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து உள்ளது.

அப்பொழுது அக்கம், பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையம் மற்றும் பீளமேடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

Advertisement

சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு முன்பு வீடு முழுவதும் மளமளவென தீ பற்றிக் கொண்டு எரிந்தது.

தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென அங்கு இருந்த வீட்டின் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்தது. இதனால் அதிர்ந்து போன அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

வீட்டில் யாரும் இல்லாததால் தீ விபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நியூஸ் கிளவுட்ஸ் கோயம்புத்தூர் WhatsApp குழுவில் இணைந்திடுங்கள்; குழுவில் இணைய இங்கே கிளிக் செய்யவும் 👆

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலிண்டர் வெடிக்கும் வீடியோ காட்சிகள்:-

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...