போதை இல்லாத இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோயம்புத்தூர் வழக்கறிஞர் சங்கம்

கோவை: போதை இல்லாத இந்தியாவை உருவாக்க பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோயமுத்தூர் வழக்கறிஞர் சங்கம் முன்னெடுப்பு.

கோவை நீதிமன்ற வளாகத்தில், கோயம்புத்தூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து, ‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’ என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது.

Advertisement

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மூலம் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில், குறிப்பாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட உள்ளது.

Advertisement

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி கூறுகையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படியும், NALSA உத்தரவின்படியும், கடந்த 2025ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போது கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கமும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகக் கூறினார்.

மேலும், ஒரே நாளில் 200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழக்கறிஞர்களை அனுப்பி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாணவர்களின் நண்பர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அவர்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பதால், அவர்களிடையே போதைப்பொருள் குறித்த தெளிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதன் மூலம் போதையில்லா இந்தியா என்ற இலக்கை அடைய முடியும் என்றார்.

Advertisement

கல்லூரி மாணவர்களில் சிலர் ஏற்கெனவே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களிடம் அப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சவாலாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, சிறு வயதிலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அடுத்த தலைமுறையினரையாவது போதைப்பொருள் பழக்கமில்லாதவர்களாக உருவாக்க முடியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு மாநிலங்களில் போதைப்பொருள் தொடர்பாக வெவ்வேறு சட்ட நடைமுறைகள் இருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், அந்தந்தக் காலகட்டத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே சட்டங்கள் இயற்றப்படுவதாகவும், தேவைக்கேற்ப சில சட்டப் பிரிவுகள் சேர்க்கப்படுவதும் திருத்தப்படுவதும் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...