கோவை விமான நிலையத்தில் இ சிகரெட், தங்கம் கைப்பற்றல்…

கோவை: ஏர் அரேபியா விமானத்தில் கோவை வந்த பயணியிடம் தங்கம் மற்றும் மின்னணு சிகரெட் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து வந்த ஆண் பயணியிடம் இருந்து ரூ.8.76 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுச் சிகரெட்டுகள், மின்னணு சிகரெட்டுகள் மற்றும் ஜீன்ஸ் பேண்ட்டில் பதுக்கி எடுத்து வரப்பட்ட தங்கப் பேஸ்ட் ஆகியவற்றை மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றினர்.

Advertisement

ஷார்ஜாவில் இருந்து கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளைப் மத்திய புலனாய்வுப் பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாகக் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரை நிறுத்தி, அவரது சோதனையிடப்பட்ட போது லக்கேஜ் பைகளில் சட்ட விரோதமாகக் கடத்தி வரப்பட்ட 50,000 ‘எஸ்ஸி சேஞ்ச்’ (Esse Change) பிராண்ட் வெளிநாட்டுச் சிகரெட்டுகள் மற்றும் 80 ‘எல்ஃப்பார்’ (Elfbar) மின்னணு சிகரெட்டுகள் (Vapes) இருப்பது கண்டறியப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் மதிப்பு ரூ.8.76 லட்சம் ஆகும். மேலும், அந்தப் பயணியை தீவிரமாகச் சோதனையிட்டதில், அவர் அணிந்து இருந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உட்பகுதியில் சாதுர்யமாகப் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 93 கிராம் எடை உள்ள தங்கப் பேஸ்ட்டையும் அதிகாரிகள் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

Advertisement

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட அந்தப் பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

அன்னூரில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு…

கோவை: அன்னூர் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...