யூடியூப் பிரபலத்தை பார்க்கும் ஆர்வம்- கோவை பள்ளி மாணவிகள் எடுத்த முடிவு…

கோவை: யூடியூப் பிரபலத்தை பார்ப்பதற்கு சென்னைக்கு செல்ல முயன்ற 4 பள்ளி மாணவிகளை கோவை காவல்துறையினர் மீட்டனர்.

Advertisement

கோவையை சேர்ந்த தனியார் பள்ளியில் பயிலும் 7-ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் வீட்டில் பெற்றோரிடம் கேட்டு செல்போன் வாங்கி வைத்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி பலரை தங்களுக்கு நண்பர்களாக சேர்த்ததாக தெரிகிறது.
அதில் ஒரு மாணவி யூடியூப் பார்ப்பது சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான மோனலிசாவின் (வயது 22) அறிமுகம் கிடைத்தது. மோனலிசா தனது யூடியூப்பில் பதிவேற்றம் செய்யும் அனைத்து வீடியோக்களையும் அம்மாணவி பார்த்து வந்தார்.

இதனால் அந்த மாணவி, மோனலிசாவின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யை பெற்று அவரை பின்தொடர்ந்து மோனலிசாவிடம் அடிக்கடி பேசியும் வந்துள்ளார். இதற்கிடையே, அந்த மாணவி மோனலிசா குறித்து தனது சக தோழிகளுடனும் தெரிவித்துள்ளார்.

Advertisement

அதனால் அவர்களும் இன்ஸ்டாகிராமில் மோனலிசாவை பின்தொடர்ந்து மோனலிசாவிடம் பேசியும் வந்துள்ளனர்.
இதனால் அவரை நேரில் சந்தித்து பேச 4 மாணவிகளுக்கும் ஆசை பட்டு அவர்களும் மோனலிசாவிடம் இன்ஸ்டாகிராமில் தாங்கள் சென்னை வருவதை தெரிவித்தாக தெரிகிறது. அதற்கு அவர் வாருங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

இதையடுத்து மாணவிகள் 4 பேரும் சென்னை செல்ல முடிவு செய்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் வீட்டில் இருந்து அந்த மாணவிகள் 4 பேரும் யாருக்கும் சொல்லாமல் புறப்பட்டுள்ளனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவிகளை அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் மாநகர காவல்துறையில் புகார் அளித்தனர்.

Advertisement

மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது அந்த மாணவிகள் 4 பேரும் கோவை இரயில் நிலையத்துக்கு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தனிப்படை போலீசார் இரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று அங்கு நின்று இருந்த 4 மாணவிகளையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து ஒப்படைத்தனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக மோனலிசாவிடமும் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இதற்காக அவருக்கு நோட்டீசு அனுப்பப்பட உள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...