கோவை மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறி சென்ற பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார்.

Advertisement

கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் மலைகோவில் பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு வாகன வசதிகள் சாலை வசதிகள் எதுவும் இல்லாததால் நடந்தே தான் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

புரட்டாசி மாதத்தை தொடர்ந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். பக்தர்கள் பலரும் நீண்ட தாங்கு கம்புகளை கொண்டே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை மீஞ்சூர் பகுதியை சேர்ந்த வினோத் (48) அவரது நண்பர்களுடன் இன்று காலை மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறி உள்ளார். பாதி தூரத்திற்கு சென்ற போது மூச்சுத்திணறுவதாக கூறி மீண்டும் தான் கீழேயே செல்கிறேன் என தெரிவித்துவிட்டு திரும்பி உள்ளார்.

Advertisement

அவர் மட்டும் கீழே இறங்கி கொண்டிருக்கும் பொழுது திடீரென மயக்கம் ஏற்பட்டு விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து எழுப்ப முயன்றுள்ளனர்.

இருந்த பொழுதிலும் அவர் கண்விழிக்காததால் உடனடியாக அடிவாரத்திற்கு தூக்கி வந்து 108 ஆம்புலன்ஸில் அவரை பரிசோதித்த பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

பிறகு அவரது நண்பர்களுக்கு தகவல் கொடுத்து உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தடாகம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...