Header Top Ad
Header Top Ad

போலி மாத்திரை தயாரித்த நிறுவனத்திற்கு அபராதம் !!!

Advertisement

Advertisement
கோவையில் போலி மாத்திரை தயாரித்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை கோவில்பாளையத்தில் ஒரு மருந்து கடையில் கடந்த 2018 ஏப்ரல் 12 இல் கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு அலுவலக ஆய்வாளர் திடீர் சோதனை நடத்தினார்.

அப்பொழுது கண் மற்றும் தோல் நோய்க்கு பயன்படுத்தப்படும் மெட்லோன் – 4 என்ற மாத்திரையை கைப்பற்றி பரிசோதனை செய்தபோது போலி என்பது தெரியவந்தது.

Advertisement

Single Content Ad

இந்த மாத்திரை இமாச்சலப் பிரதேச மாநிலம் சோலார் என்ற இடத்தில் செயல்பட்ட ஜேஎம் லேபரட்டரி என்ற நிறுவனம் தயாரித்து சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பாக அந்த நிறுவன இயக்குனர் சந்திப்பு சர்மா மீது கோவை ஜெயம் 2 நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் ரகுமான் குற்றம் சாட்டப்பட்ட மருந்து உற்பத்தி நிறுவன இயக்குனர் சந்திப் சர்மாவுக்கு 50000 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Recent News

Latest Articles