‘எங்க 3 பேரு கூட மட்டும் ADJUSTMENT பண்ணனும்’… இன்ஸ்டா பெண் பிரபலத்துக்கு வலை;சிக்கிய ‘கவிதை கோபால்’

கோவை; இன்ஸ்டா பெண் பிரபலத்துக்கு பாலியல் வலை வீசிய, சோஷியல் மீடியாவில் மிகவும் பிரபலமான கவிதை கோபால் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணிடம் அவன் பேசிய ஆடியோவை ஆதாரமாக காட்டி, நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

பாலியல் தொல்லை

சினிமாவில் கதையை எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோலத் தான் இந்த ‘அட்ஜெஸ்ட்மென்ட்’. வாய்ப்பு கேட்டு செல்பவர்களுக்கு, அந்தத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள், தங்களின் இச்சைக்கு கட்டுப்பட வேண்டி, கட்டாயப்படுத்துவது சினிமாவில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மீ டூ பிரசாரம் மூலம் பல நடிகைகள் தங்களின் ஆதாங்கங்களையும், உண்மைகளையும் போட்டுடைத்துள்ளனர். இதில், துணை நடிகர் முதல் பிரபலமான நடிகர் வரையிலும் சிக்கியுள்ளனர்.

Advertisement

குறிப்பாக, தமிழ் சினிமாவில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டு இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ஒரு சிலர் மட்டுமே வெளியே வெளிப்படையாக சொல்வதால், சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் குறைந்து காணப்படுகிறது என்று சொல்லி விட முடியாது. வெளியே சொல்லாதவர்கள் ஏராளம்.

அட்ஜெஸ்ட்மென்ட்

Advertisement

அண்மையில் சீரியல் நடிகை ஒருவர் பட வாய்ப்புக்காக ஆபாசமாக வீடியோ காலில் வந்தது சமூக வலைதளங்களில் கசிந்தது. இந்த விவகாரம் வெட்ட வெளிச்சமாகியும், சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரத்ல் அட்ஜெஸ்ட்மென்ட் நடக்கிறது.

சினிமாவில் உச்சத்தில் இருப்பவர்கள் தான் இந்த அட்ஜெஸ்ட்மென்ட்டில் தீவிரமாக இருக்கிறார்களா? என்றால், அது தான் இல்லை. இனி ஒரு படத்தில் கூட முகம் காட்டாத நபர் ஒருவர் தற்போது இன்ஸ்டா பெண் பிரபலத்திடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டு வசமாக சிக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கடல் நீரும் உப்புதான்

‘கடல் நீரும் உப்புதான், கண்ணீரும் உப்புதான்,’ என்று ஒரே ஒரு கவிதையினால் மிகவும் பிரபலமானவர் தான் கவிதை கோபால். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளப்பனேரி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த இவர், 2017ம் ஆண்டு முதல் கவிதை எழுதி வருகிறார். சமூக வலைதளத்தில் இவர் பேசிய சிறு சிறு வீடியோக்களின் மூலம் இவர் டிரெண்டாகியுள்ளார். மேலும், மீம் டெம்பிலேட்டாகவும் இருந்து வருகிறார்.

மாஸ்டர், நட்பே துணை, துணிவு, வாரிசு போன்ற படங்களில் கூட்டத்தில் ஒரு நபராக நடித்துள்ளார். இவர் ஸ்கிரினில் முகம் காட்டியதே கிடையாது.

இப்படிப்பட்ட சூழலில், திருநெல்வேலியைச் சேர்ந்த இன்ஸ்டா பெண் பிரபலத்திடம், பட வாய்ப்பு வேண்டும் என்றால், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் தன்னுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டு வம்பில் சிக்கியுள்ளார்.

நாங்க 3 பேருதான்…

பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். கவிதை கோபால் தன்னுடன் பேசிய ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், கவிதை கோபால் கூறியதாவது; டைரக்டர் ஜான் மாதவன், தயாரிப்பாளர் மற்றும் என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால், நீங்கள் சினிமா பீல்டுக்குள் வந்து விடலாம்.” எனக் கூறியுள்ளார்.

அந்தப் பெண் கூறியதாவது; படத்திற்கு நிறைய கதாபாத்திரத்திற்கு ஆட்களை தேடி வருகிறோம் என்று சொல்லி என் தோழியிடம் இருந்து என்னுடைய நம்பர் வாங்கினார்கள். எனக்கு போன் பண்ணுன உடனே, அட்ஜெஸ்ட் பண்ண முடியுமா? என்று கவிதை கோபால் கேட்டான். நான் ஒரு இன்ப்ளுயன்ஸர் என்பதால், பயப்படாமல் வீடியோ எடுத்து, ஆதாரங்களுடன் பதிவு செய்து வைத்துள்ளேன். முதலில் டைரக்டர், தயாரிப்பாளரிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் சினிமாக்குள் வந்து விடலாம் என்றான். அடுத்த நாள் கால் பண்ணி என்னுடனும் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று சொல்கிறான். அப்போது தான் நான் உங்களை உள்ளே கூப்பிட்டு போவேன் என்கிறான்.

அண்ணா எல்லாம் வேணாம்

கால் பண்ணுன உடனே ஹீரோயினா பண்றீங்களா? இலைலை சின்ன சின்ன ரோல் பண்றீங்களா என்று கேட்டார்கள். ஓகே அண்ணா என்று சொன்னேன். என்னை அண்ணன் என்று எல்லாம் சொல்ல வேண்டாம். நீ, வா, போ என்றே கூப்பிடலாம் என்று சொன்னேன். நான் இன்ப்ளூயன்ஸர் என்று தெரியாது. அவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு கூறினார்.

வெள்ளித்திரை மட்டுமல்ல, சின்னத்திரையின் ஸ்கிரினிலும் இதுவரையில் முகம் காட்டாத ஒருவன், இப்படி தைரியமாக பெண்களை படுக்கைக்கு அழைக்கிறான் என்றால், இவன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. இதுபோன்ற நபர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைகளை பார்த்து, சினிமா துறையில் பெண்களுக்கு தொல்லை என்பதே வரக்கூடாது என்ற அளவில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே, பாதிக்கப்பட்ட இந்தப் பெண் போன்ற இன்ப்ளூயன்ஸர்களின் எண்ணமாக இருக்கிறது.

Amazon Link 3
Wilson Joel V
Wilson Joel V
Willson Joel V is a journalist with 13 years of experience, specializing in lifestyle, food, and health journalism. He is known for crafting special stories based on real-life events, bringing authenticity, depth, and human perspectives to his reporting.

Recent News

ரூ.634 கோடி ஊழல்… வசமாக சிக்கும் ‘செம்பருத்தி’ சீரியல் நடிகைகள்… யார் யார் தெரியுமா?

கோவை: தமிழகத்தை உலுக்கியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் ரூ.634 கோடி ஊழல் குற்றச்சாட்டில், பல்வேறு நடிகைகளுக்கும் தொடர்பிருப்பதாக வெளியான தகவல்கள் சின்னத்திரையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதில், எந்தெந்த நடிகைகள் சிக்கப்போகிறார்கள்...

Video

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...