Header Top Ad
Header Top Ad

கோவையில் இருந்து முதன்முறையாக விமானத்தில் பறந்த அரசுப் பள்ளி மாணவர்கள்!

கோவை: கரூர் சோமூர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 30 மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்களை முதன்முறையாக கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் சுற்றுலா சென்றனர்.

கரூர் ரவுண்ட் டேபிள்,மெட்ராஸ் ஸ்டெர்லிங் ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் ஆகியோர் இணைந்து இந்த சுற்றுலாவை ஒருங்கிணைத்து உள்ளனர்.

கரூரிலிருந்து வேன் மூலமாக அழைத்து வரப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுடன் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்தனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் மாணவர்களை வழியனுப்பும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மாணவர்களை வழியனுப்பி வைத்தார்.

Advertisement

இது குறித்து கல்விச் சுற்றுலா அழைத்து செல்லும் தன்னார்வலர்கள் வெங்கட் ராகவன், அஜய் மோகன், நந்திதா ஆகியோர் கூறுகையில்,

“விமானத்தில் பயணித்த மாணவ, மாணவிகள் முதன்முறையாக பயணிப்பதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னைக்கு சென்றதும், அவர்களுக்கு தேவையான காலை உணவு, மதிய உணவு என அனைத்தையும் வழங்கி, சென்னையின் முக்கிய இடங்களுக்கு அழைத்து சென்றோம்.

விமானத்தில் பயணம் செய்த மாணவர்கள், விமானத்தில் இருந்தபடி மேல் இருந்து கீழே உள்ளே பகுதிகளை பார்வையிட்டு ரசித்தனர்.” என்றனர்.

Recent News