கோவையில் மாவீரர் தினம் அனுசரிப்பு…

கோவை: கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் விதமாகவும் போற்றும் விதமாகவும் தமிழீழ விடுதலை போராளி சங்கரின் நினைவு தினமான நவம்பர் 27ம் தேதி மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று தமிழீழ விடுதலை போரில் போரிட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் அவர்களை போற்றும் விதமாகவும் பல்வேறு பகுதிகளில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாவீரர் தினத்தை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழீழ போரில் உயிரிழந்தவர்களின் புகைப்பட பேனருக்கு முன்பு தமிழீழ வரைபடம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த வீரவணக்க நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகுவத்தி ஏந்தி வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த நிகழ்வில் தமிழீழத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தனி நாடாக்க உறுதியிருப்போம் என்றும் உறுதி ஏற்கப்பட்டது.

Recent News

Video

Join WhatsApp