கோவையில் துவங்குகிறது இன்டெக் 2026 கண்காட்சி…

கோவை: கோவையில் இன்டெக் 2026 கண்காட்சி நடைபெற உள்ளது.

Advertisement

கோவை கொடிசியா தொழில் அமைப்பு சார்பில் ‘இன்டெக் 2026’ எனும் சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இக்கண்காட்சி குறித்து கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன், இன்டெக் தலைவர் பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கினர்.

அப்போது அவர்கள் கூறியதாவது,

Advertisement

இன்டெக் 2026 கண்காட்சி ஜூன் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், இதில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, தைவான், சீனா மற்றும் கொரியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும், கோவா குஜராத் ஹரியானா கர்நாடகா கேரளா மகாராஷ்டிரா உத்தரப்பிரதேசம் மத்திய பிரதேசம் தெலுங்கானா புதுடெல்லி பஞ்சாப் ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்களில் இருந்து 460 க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், 700க்கும் மேற்பட்ட அரங்குகளில் தங்களது இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

இதன் மூலம் சர்வதேச தொழில் உற்பத்தி மையமாக தென்னிந்தியாவையும் குறிப்பாக கோயம்புத்தூரையும் உருவாக்குவதற்கான பெரும் முயற்சியாக இக்கண்காட்சி 21வது முறையாக நடத்தப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Advertisement

இக்கண்காட்சியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உற்பத்தி, ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், அளவீட்டு தொழில்நுட்பங்கள், அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் சிஸ்டம்ஸ், ஸ்மார்ட் ஃபேக்டரி எக்கோ சிஸ்டம்ஸ், லேசர் கட்டிங் மெஷின், சிஎன்சி மெஷின் ஆகிய தொழில்நுட்பங்கள் குறித்த ஏராளமான இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயங்குவதை நேரடியாக காணும் வகையில் காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும், இக்கணாட்சியின் ஒரு பகுதியாக புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘Global Manufacturing Cluster Vision 2047’ எனும் சர்வதேச தொழில்நுட்ப மையங்கள் குறித்த கருத்தரங்கம் ஜூன் 5ஆம் தேதி ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற உள்ளதாகவும் கூறினர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நண்பரை கடத்தி பணம் பறிக்க முயற்சி; 5 பேருக்கு குண்டர் தடுப்புச் சட்டம்

டீக்கடை உரிமையாளரை கடத்தி ரூ.2 லட்சத்துக்கும் மேல் பணம் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 5 ரவுடிகள் மீது கோவை மாநகர போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...