தேர்தல் முடிந்ததும் ஜனநாயகன் வெளியாகும் என படக்குழு முடிவு செய்த தேதி குறித்த தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்த விஜய், தனது சினிமா பயணத்திற்கு முடிவுகட்டிய நிலையில் முழுமையாக அரசியலில் ஈடுபட்டுள்ளார். “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கிய அவர், இனி மக்கள் பணியாற்ற அரசியல் மேடையிலேயே முழு கவனம் செலுத்தப் போவதாக அறிவித்திருந்தார். அதே சமயம், தன் சினிமா வாழ்க்கையின் கடைசி திரைப்படமாக “ஜனநாயகன்” இருக்கும் என்றும் விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
சென்சார் சிக்கலில் ஜனநாயகன்
இந்த திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்ததால், ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் படம் வெளியீட்டுக்கு முன்பாக எதிர்பாராத விதமாக சென்சார் சிக்கல் உருவானது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் படத்திற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதுடன், ரிலீஸ் தேதியும் தொடர்ந்து தள்ளிப் போகும் நிலை உருவானது.

குறிப்பாக, படத்தில் உள்ள சில காட்சிகள் மற்றும் வசனங்கள் குறித்து தணிக்கை வாரியம் ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தயாரிப்பு தரப்பு அந்த காட்சிகளை நீக்குவதற்கும் மாற்றுவதற்கும் தயாராக இருந்தாலும், தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக படம் வெளியீடு பல முறை தள்ளிப்போனது.
இன்று மறுதணிக்கை
இந்நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மறுதணிக்கைக் குழு படத்தை மீண்டும் பரிசீலிக்க முடிவு செய்துள்ளது. இன்று அந்த குழு “ஜனநாயகன்” திரைப்படத்தை முழுமையாக பார்ப்பதாகவும், முன்பு வெட்டியெடுக்கப்பட்ட காட்சிகள் குறித்து மீண்டும் ஆய்வு நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் படம் வெளியீட்டுக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, “ஜனநாயகன்” திரைப்படத்தை மே 7ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதன் பின்னர் மூன்று நாட்களில் படம் வெளியிடப்படும் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வந்தது முதலமைச்சர் ஆகத்தான்… கோவையில் செங்கோட்டையன் பேட்டி
மே 7ல் ரிலீஸ்?
விஜயின் அரசியல் பயணத்துக்கும், அவரது கடைசி திரைப்பட வெளியீட்டுக்கும் இடையே உருவாகியுள்ள இந்த கால ஒற்றுமை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. “விஜய் முதலமைச்சர் ஆன பிறகே அவரது கடைசி திரைப்படம் வெளியாகும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆர்வத்துடன் பேசத் தொடங்கியுள்ளனர்.

இதனால், “ஜனநாயகன்” திரைப்படத்தின் மறுதணிக்கை முடிவு என்ன ஆகும்? படம் உண்மையிலேயே மே 7ஆம் தேதி வெளியாகுமா? அல்லது மீண்டும் தாமதமா? என்ற கேள்விகள் தற்போது சினிமா வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விஜயின் கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” எப்படி வெளியீட்டை காணப் போகிறது என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Group of vettiyans waiting for the date….avan sambarika namba time a waste pannanuma??