கோவை குற்றாலம் மீண்டும் மூடல்!

கோவை: மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குற்றாலம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நீலகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத்தலங்கள் அனைத்தையும் மூடவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் கனமழை பெய்ததால் கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நீர்வரத்து சீராகி கடந்த ஜூலை 31ம் தேதி தான் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement

இதனிடையே ரெட் அலெர்ட் காரணமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Join our WhatsApp Group for Coimbatore Updates

Advertisement

இதுகுறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான வாய்ப்பு (ரெட் அலர்ட்) கொடுக்கப்பட்ட காரணத்தால் மாவட்ட வன அலுவலரின் உத்தரவுப்படியும், வனச்சரக அலுவலரின் ஆலோசனையின் பேரிலும் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று 05/08/2025 செவ்வாய்க் கிழமை மூடப்படுகிறது.” என்று குறிப்பிட்டுள்ளது.

எனினும் கோவை குற்றாலம் நாளை திறக்கப்படுகிறதா? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நண்பர்கள் செய்த வெறிச்செயல்- கோவையில் கொடூரம்…

கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவனை சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று பெற்றோர்கள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.