கோவை: அனைத்து வகை மதுபானக்கடைகள், மனமகிழ்மன்றங்களை நாளை மூட உத்தரவிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் Dry Day கடைபிடிக்கப்படுவதால் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை மதுபானக்கடைகள், மனமகிழ்மன்றங்களை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் பார்கள் (FL1) பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் (FL2) செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் (FL3) செயல்படும் மதுக்கூடங்கள்,
தமிழ்நாடு ஹோட்டல் (FL3A) சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள்(FL3AA)மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை (FL11) உள்ளிட்ட அனைத்து உரிமத்தளங்களையும் நாளை (வெள்ளிக்கிழமை) காந்தி ஜெயந்தி (Gandhi Jayanti ) தினத்தன்றுமூட (Dry day) உத்திரவிடப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு முரணாக மேற்குறிப்பிட்ட தேதியில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும்மதுபான வகைகள் சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஓரிடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.




