கோவை வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு அமைச்சர் ஆனந்த் வாழ்த்து…

கோவை: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

கோவையைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இன்று விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர் ஆனந்த் மற்றும் அவரது குடும்பத்தினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வித்யா ராம்ராஜ், பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இதற்காக மாநில அரசு மற்றும் விளையாட்டுத் துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

தற்போது ரயில்வே துறையில் பணியாற்றி வருவதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தனக்கு அளித்த ஆதரவால் இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

தங்களது பயிற்சியாளர் அளித்த ஒத்துழைப்பை குறிப்பிட்ட வித்யா ராம்ராஜ், கடந்த போட்டியைவிட இந்தப் போட்டியில் கடுமையாக உழைத்ததாகவும், 2023ஆம் ஆண்டிலிருந்து சாதனையை முறியடிக்கும் நோக்கத்துடன் பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். பதக்கத்தை இலக்காகக் கொள்ளாமல், நேரத்தை மேம்படுத்துவதே தங்களது முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் கூறினார்.

ஒலிம்பிக் வாய்ப்பு குறித்து பேசிய அவர், இந்தியா இன்னும் உலக அளவில் போட்டியிட வேண்டிய நிலையில் இருப்பதாகவும், தற்போதைய சாதனை தனக்கு முழுமையான நிறைவை அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் தொடர்ந்து முழுமையான ஆதரவு அளித்து வருவதாகவும், இளம் விளையாட்டு வீரர்கள் பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களை நம்பி தீவிரமாகப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

மேலும், ஒரு விளையாட்டு வீரரின் வெற்றிக்குப் பின்னால் பயிற்சியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து முதலமைச்சரிடமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கும்போது பயிற்சியாளர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கலைக்கு கட்டுப்பாடே கிடையாது- கோவையில் ஹிப்ஹாப் ஆதி பேட்டி…

கோவை: கலைக்கு கட்டுப்பாடே கிடையாது என்றும் எனக்கு தற்போதைக்கு 2 மொழிகள் போதுமானதாக உள்ளது என்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி தெரிவித்துள்ளார். கோவை பிராட்வே சினிமாஸில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி,...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...