பணம் சேமிக்கும் எளிய வழிகள்.. தினசரி வாழ்க்கையில் சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவது எப்படி?

பணம் சேமித்தலின் அவசியம் மற்றும் வாழ்வில் பணம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி என்பதை இரண்டு பகுதிகளாகப் பார்க்கலாம். முதல் பகுதி இதோ…

Advertisement

இன்றைய வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சரியாக சேமிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.

பலர் நல்ல வருமானம் பெற்றாலும் திட்டமிடாத செலவுகள் காரணமாக மாத இறுதியில் பணத்தட்டுப்பாட்டை சந்திக்க நேரிடுகிறது. அதனால் பணத்தைச் சம்பாதிக்கும் பழக்கத்துடன் சேர்த்து அதை புத்திசாலித்தனமாக நிர்வகிக்கும் பழக்கமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான படத்தில் இதனை அழகாக சொல்லியிருப்பார்கள். “பணம் இல்லா விட்டால் சந்தோஷம் இருக்குமா? இருக்காதா என்று தெரியாது? ஆனால் பணம் இருக்கும் இடத்தில் தான் மரியாதை இருக்கும்”

Advertisement

இன்றைய அவசர உலகத்தில் இந்த வசனத்தை நாம் கட்டாயமாக உற்றுநோக்க வேண்டும். மரியாதையான வாழ்க்கையை வாழ பணம் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசிய ஒன்றாக உள்ளது. எனவே பணத்தை சேமித்தல் என்பது அவசியமான ஒன்றாகும்.

சரியான சேமிப்பு பழக்கம் இருந்தால் எதிர்கால தேவைகள், அவசர காலங்கள் மற்றும் குடும்ப பாதுகாப்புக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

Advertisement
financial planning tamil

முதலில், உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். மாதந்தோறும் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது? எவ்வளவு செலவாகிறது என்பதை ஒரு நோட்டு புத்தகத்தில் கணக்கிட்டு வாருங்கள்.

மாத இறுதியில் இதனைப் புரட்டிப் பார்க்கையில், எது தேவையான செலவு? எது தேவையில்லாத செலவு என்பதை உங்களால் எளிதாக கணக்கிட முடியும். இதனை ஏன் சொல்கிறோம் என்றால்,

செலவுகளை கண்காணிப்பது சேமிப்பின் முதல் படியாகும்.

நமது அன்றாட வாழ்க்கையில் தேவைக்கும் ஆசைக்குமான வித்தியாசத்தை நாம் கடாயம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நமக்கு அத்தியாவசியமான பொருட்களுக்கே முன்னுரிமை கொடுத்து பணத்தைச் செலவழிக்க வேண்டும்.

பணம் சேமிக்கும் வழிகள்

தள்ளுபடி, சலுகை போன்ற கண்கவர் விளம்பரங்களைப் பார்த்து பொருட்களை வாங்கும் பழக்கத்தை இன்றே கைவிடுங்கள் வாசகர்களே பல நேரங்களில் சிறிய சிறிய செலவுகள் கூட சேர்ந்து பெரிய தொகையாக மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உங்களது மாதாந்திர வருமானத்தில் குறைந்தது 10 முதல் 20% பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

சம்பளம் கிடைத்தவுடன் முதலில் ஒரு தொகையை சேமிப்பிற்காக ஒதுக்கி வைப்பது ஒரு நல்ல பழக்கம். நீங்கள் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவரா? குறைந்தது ஆயிரம் ரூபாயை சேமிக்க முயற்சியுங்கள்.

money saving tips tamil

இதற்காக தனியாக ஒரு சேமிப்பு கணக்கு வைத்திருப்பது உதவியாக இருக்கும். இந்த முறையில் சேமித்தால் அவசரகட்டத்தில் அடுத்தவர் கையை நாடிச் செல்ல வேண்டியதன் அவசியம் குறையும்.

பகுதி இரண்டை இங்கே படிக்கலாம் வாசகர்களே…

பணம் சேமிக்கும் எளிய வழிகள்… அவசர நிதியை இப்போதே உருவாக்குங்கள்…!

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஜூலை 30, 2026 ராசிபலன்: உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?

ஜூலை 30-ம் தேதிக்கான 12 ராசிகளின் தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம், கல்வி மற்றும் காதல் தொடர்பான இன்றைய ராசிபலன்களை முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...