பெரியார் பிறந்தநாள்- கோவையில் கருஞ்சட்டை பேரணி…

கோவை: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

Advertisement

தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பெரியாரின் சிலைகளுக்கும் புகைப்படங்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அமைப்புகள் சங்கங்களை சேர்ந்தவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பெரியார் கொள்கைகள் பற்றி மேற்கோள்காட்டி வாழ்த்துக்களையும் மரியாதைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

கோவையிலும் பல்வேறு இடங்களில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி கோவையில் நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து காந்திபுரம் பெரியார் படிப்பகம் வரை கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.

Advertisement

முற்போக்கு இயக்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் பல்வேறு பெரியாரிய அமைப்புகள் பங்கேற்றனர் இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரியாரின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு பெரியாரின் கொள்கைகளை முழக்கமிட்டபடி பேரணி மேற்கொண்டனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை விமான நிலையத்தில் யாத்ரி சேவா அபியான் துவக்கம்…

கோவை: கோவை விமான நிலையத்தில் யாத்ரி சேவா அபியான் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கியது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், சேவைத் தரம், பாதுகாப்பு மற்றும் தூய்மையை மேம்படுத்தும் நோக்கில் ‘யாத்ரி சேவா...

Video

கோவையில் ஈச்சர் லாரியில் நெழிந்த பாம்பு…

கோவை: எல் அண்ட் டி பைபாஸில் திரில் ஈச்சர் லாரி இன்ஜினில் பதுங்கிய 8 அடி சாரைப் பாம்பு மீட்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலையில்...