போலீசார் அபராதம் விதிப்பது போல் இ-சலான் அனுப்பி கோவையில் மோசடி! குவியும் புகார்கள்!

கோவையில் போலீசார் அனுப்பும் இ சலான் போல் போலீஸ் சலான் அனுப்பி மோசடி செய்ததாக 20 புகார்கள் பெறப்பட்டு உள்ளது.

Advertisement

டிஜிட்டல் பணப்பதிவர்த்தனைகள் அதிகரித்து உள்ள சூழலில், அது சார்ந்த சைபர் க்ரைம் குற்றங்களும் மோசடிகளும் அதிகரித்து உள்ளன. மோசடிகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு மோசடி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டால் மோசடி நபர்கள் அடுத்த மோசடியை அரங்கேற்ற துவங்குகின்றனர்.

தற்பொழுது போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஆன்லைன் வழியாக காவல்துறை அபராதம் விதித்து. இ சலான் வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணுக்கு அனுப்புகின்றனர்.

Advertisement

அபராதத்தை செலுத்த அரசு பரிவாகன் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றி காவல் துறையினர் அனுப்புவதை போலவே போக்குவரத்து விதி மீறிய வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்திகள் அனுப்புகின்றனர்.

வாட்ஸ் அப்பில் மட்டுமே அனுப்பப்படும் இக்குறுஞ்செய்தியில் விதி மீறலில் ஈடுபட்டது போல் வாகனத்தின் புகைப்படம், இடம், நேரம் அபராத தொகை உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம்பெற்று இருக்கும்.

இத்துடன் அபராத செலுத்துவதற்கான போலி செயலிக்கான லிங்க்கும் அனுப்பப்படுகிறது. இந்த லிங்கை கிளிக் செய்ததும் வங்கியில் இருந்து பணம் திருடப்படுகிறது.

தற்பொழுது இதுகுறித்து புகார்கள் அதிக அளவில் பெறப்படுகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20 புகார்கள் பெறப்பட்டு உள்ளன.

இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறும்போது :

வாட்ஸ் அப்பில் வரும் எந்த ஒரு குறுஞ்செய்தி லிங்க் அறிமுகம் இல்லாத நபர்கள் அனுப்பும் செயலிகளையும் பதிவிறக்கம் செய்யக் கூடாது. விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டும் பணம் பறிபோவதை தடுக்க முடியும் என்றனர்.

Recent News

எந்த கடவுளும் இதனை கூறவில்லை- கோவையில் துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்ட விஷயம்…

கோவை: குறிப்பிட்ட மொழியில் தான் வழிபட வேண்டும் என எந்த கடவுளும் கூறவில்லை என துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.கோவை பேரூர் பகுதியில் உள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்...

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Whatsapp Group