கோவை: கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம் வெள்ளியங்காடு கிராமம், பத்ரகாளியம்மன் கோவில் அருகிலுள்ள சமுதாயக் கூடத்தில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 98 பயனாளிகளுக்கு ரூ.166 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். மக்கள் தொடர்பு முகாம் மூலம் ஒவ்வொரு வட்டத்தில் உள்ள கிராமத்தை தேர்வு செய்து, அந்த ஊரில் என்னென்ன தேவைகள் என்பது குறித்து மனுக்களாக பெற்று, அதனடிப்படையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நேரில் சென்று பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட வேண்டும் என அறிவுறுத்தியதை தொடர்ந்து மேட்டுப்பாளையம் வட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
இம்முகாமில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளதுஇங்குள்ள பொதுமக்கள் இதனை பயன்படுத்தி இரத்த அழுத்தம், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளலாம். தற்போதைய காலகட்டத்தில் நமது வீட்டு வளாகங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். டெங்கு உள்ளிட்ட நோய்கள் வராமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இம்முகாமிற்கு ஏற்கனவே மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 98 பயனாளிகளுக்கு ரூ.166 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று நடைபெற்ற இம்முகாமில் பொதுமக்களால் வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அரங்குகளை பார்வையிட்டு, அரசு திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இம்முகாமில் வருவாய்த்துறையின் சார்பில் 33 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள். பழங்குடியினர் சான்றிதழ்கள், இணையவழி பட்டா மாறுதல்களும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.51,01,800/- மதிப்பிலான கடனுதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு சொட்டுநீர் பாசனம் மற்றும் ஆடிப்பட்ட விதை தொகுப்பு என ரூ.16,59,320/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும். தாட்கோ சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.21,53.803- மதிப்பில் வாகனங்கள் வாங்குவதற்கான மானியத் தொகையும்,
மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.76.48 இலட்சம் மதிப்பில் கடன் பெறுவதற்கான ஆணைகளையும். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு தலா ரூ2,000/- என மொத்தம் ரூ.32,000- மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.46,400/- மதிப்பிலான உபகரணங்களையும். வேளாண்மைத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.3.275/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் என மொத்தம் 98 பயனாளிகளுக்கு ரூ.1,66,44,598/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.





