Header Top Ad
Header Top Ad

கோவையில் நாய் குட்டிகளை கொன்று குப்பை தொட்டியில் வீச்சு

கோவையில் நாய் குட்டிகளை கொன்று குப்பை தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது…

கோவை துடியலூர் அருகே உள்ள கே.வடமதுரை அருணா நகர் 6வது வீதியில் குப்பை தொட்டி உள்ளது. இங்கு ஒரு சாக்கு பையில் கட்டி நாய் குட்டிகள் வீசப்பட்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி வாசிகள் விலங்குகள் நல அமைப்பை சேர்ந்த சிந்தியா(26) என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர் அங்கு சென்று பார்த்தபோது, சாக்குப்பையில் 3 குட்டிநாய்கள் இறந்த நிலையிலும், ஒரு நாய் குட்டி உயிருடனும் இருந்தது. மர்ம நபர் நாய் குட்டிகளை கொன்று குப்பை தொட்டியில் வீசி சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த நாய்க்குட்டிகளை துடியலூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிருடன் மீட்கப்பட்ட நாய் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சிந்தியா துடியலூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், விலங்குகள் வதை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை கொன்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Recent News