கோவையில் ஆட்டோவுக்குள் உயிரிழந்த ஓட்டுனர்!

கோவை: கோவையில் ஆட்டோவுக்குள் ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை: போத்தனூரை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்(54). ஆட்டோ டிரைவர். திருமணமான இவர் கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு அம்மன்குளம் பகுதிக்கு சவாரி சென்றார்.

அப்போது அவர் ஆட்டோவுக்குள் திடீரென சுயநினைவை இழந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனே இது குறித்து ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் நல மையம், வேளாண் துறையில் சிறந்த முறையில் பயிற்சி பெற்ற மற்றும் புதிய சிந்தனைகள் கொண்ட...

Video

கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு…

துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் பிடித்தனர்.