இரயில்வே வேலைவாய்ப்பு- கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு…

கோவை: இரயில்வே துறையில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை அறிவித்துள்ளார்.

Advertisement

இரயில்வே தேர்வு வாரியம் (RRB) பல்வேறு இரயில்வே மண்டலங்களில் உள்ள 11,127 உதவி லோகோ பைலட் (ALP) காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான விரிவான மத்திய வேலைவாய்ப்பு அறிவிப்பை (CEN No.01/2026) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி RRB ALP வேலைவாய்ப்பு 2026-ன் முக்கிய சிறப்பம்சங்கள்:
மொத்த காலிப்பணியிடங்கள்- 11,127 பணியிடங்கள்.

விண்ணப்பிக்கும் காலம்: மே 15, 2026 முதல் ஜூன் 14, 2026 (இரவு 11:59 மணி) வரை.
வயது வரம்பு: 18 முதல் 30 ஆண்டுகள் (ஜூலை 12026 அன்றைய நிலவரப்படி) அரசு விதிகளின்படி SC/ST, OBC, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர தகுதியுடைய பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட பிரிவில் NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது, 3 வருட டிப்ளமோ (Diploma) அல்லது பொறியியல் பட்டம் (Degree in Engineering) பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்

Advertisement

இதற்கு விண்ணப்பிக்கும் முறை,
விண்ணப்பதாரர்கள் மண்டல வாரியான காலிப்பணியிடங்கள் மற்றும் விரிவான தகுதி வரம்புகளை அறிய அதிகாரப்பூர்வ CEN 01/2026 அறிவிப்பை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச பயிற்சி வகுப்பு கோயம்புத்தூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் போட்டித்தேர்வு ஆர்வர்லர்கள் https://forms.gle/pcF9LTM8ytHrAHnT7 என்ற கூகுள் படிவத்தில் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

மேலும் விவரங்களுக்கு 9361576081 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு- கோவை மாவட்ட ஆட்சியரின் அறிக்கை…

கோவை: மாற்றுத்திறனாளிகளின் சமூக தரவுகளை கணக்கெடுக்க இல்லம் தேடி வரும் பணிகள் நடத்தப்படுகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் சமூக மறுவாழ்வு பணியாளர்கள் (Community Rehabilitaion Worker...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...