கோவை: கோவை பார்க் கல்விக் குழுமத்தில் நடைபெற்ற “ஜீரோ ஜி 2026” விழாவில் புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, பார்க் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சார போட்டிகளில் கலந்து கொண்டனர்.
Read news:கோவையில் நள்ளிரவு சோகம்; பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
விழாவின் முதல் நாளில் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா, நடிகை மற்றும் பாடகி மடோனா செபாஸ்டியன் ஆகியோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாளில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் திரைப்பட நடிகர் ரியோ ராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கல்வி, விளையாட்டு மற்றும் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தொலைநோக்கு சிந்தனையின்படி, பார்க் முன்னாள் மாணவர்களின் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்பது எங்கள் இலக்கு என தெரிவித்தார்.
Read news: பாரதியார் பல்கலைக்கழகத்தில் யு.ஜி., பி.ஜி. சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
அத்துடன், இந்த ஆண்டு முதல் “நம்பிகை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” என இரண்டு புதிய கல்வி உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

பெற்றோர்களை இழந்து ஆசிரமங்களில் வசிக்கும் மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையில் “நம்பிகை” கல்வி உதவித்தொகை, AI மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் “சக்தி” கல்வி உதவித்தொகை, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் முதலாம் ஆண்டு மாணவருக்கு வழங்கப்பட்டது.
பார்க் கல்விக் குழுமம் புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.


