செல்போன் சார்ஜ் செய்யும்போது மின்சாரம் தாக்கி முதியவர் பலி

கோவை: ரத்தினபுரி முதியோர் காப்பகத்தில் செல்போன் சார்ஜ் செய்ய முயன்ற 80 வயது முதியவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கரூர் மாவட்டம் செந்தாமங்கலம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (80), கடந்த 2025 அக்டோபர் மாதம் முதல் கோவை ரத்தினபுரி காந்திஜி ரோட்டில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கி வந்தார்.

நேற்று அதிகாலை தனது அறையில் இருந்த பிளக் பாயிண்டில் செல்போனை சார்ஜ் செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Advertisement

இதுகுறித்து காப்பக மேலாளர், ரங்கசாமியின் மகன் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்து அங்கு வந்த அவர், தந்தையின் உடலை கண்டு கதறி அழுதார்.

பின்னர் தகவலறிந்த ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisement

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.