கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.

கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கோவை போத்தனூர் பகுதியை சேர்ந்த இதயதுல்லா என்பவர் போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்து நடத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று மாலை குடோனின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக அடுத்தடுத்து பரவியதால், குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் தீபிடித்து எரிந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் பட்ட பகலில் கார் மீது கல்வீச்சு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர...