கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு மாதிரி – பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோவை: கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து தீபங்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில், மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மாதிரி தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, இன்று நேரில் பார்வையிட்டார்.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முதலமைச்சர் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ‘ஜலி’ இலச்சினையை அறிமுகப்படுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பின் மாதிரி தீப விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மழைக்காலங்களில் கிடைக்கும் மழைநீரை முறையாகச் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், எதிர்கால குடிநீர் தேவையையும் ஓரளவுக்குப் பூர்த்தி செய்ய முடியும். இதனை வலியுறுத்தி வீடுகள், குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.

மேலும், விழிப்புணர்வு பிரசாரங்கள், பேரணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சியின்போது மாநகர நல அலுவலர் மருத்துவர் கார்த்திக், உதவி ஆணையர் மேகேஷ் கனகராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு 250 மணி நேர இலவசப் பயிற்சி வகுப்புகள் – விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…

கோவை: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம், நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...