ரம்ஜான் பண்டிகை- கோவையில் 5000 பேருக்கு இலவச பிரியாணி…

கோவை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 5000 பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது.

Advertisement

கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்ப்பாட்டு வாரியத்தின் கிரீன் கார்டன் குடியிருப்போர்(அடுக்குமாடி குடியிருப்பு) பொது நலச்சங்கம் சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Click here to Read news ரம்ஜான் பண்டிகை- கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் தொழுகை…

இதில் அந்த குடியிருப்பில் இருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கும் அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கும் என சுமார் 5000 பேர் சாப்பிடும் வகையில் பிரியாணி தயார் செய்யப்பட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

கிரீன் கார்டன் அடுக்குமாடி குடியிருப்பு நலச்சங்க தலைவர் முகமது முபாரக் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 7 வது ஆண்டாக இந்த பிரியாணி வழங்கும் நிகழ்வு நடைபெறுவதாகவும் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் அனைத்து மத மக்களுக்கும் மற்றும் இப்பகுதியில் வசித்துவரும் 200 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் என 600 குடும்பங்களுக்கு 5000 பேர் சாப்பிடும் அளவிற்கு பிரியாணி வழங்கப்படுவதாக முபாரக் கூறினார்.

Click here to Read news விஜய் அவசரமாக மும்பைக்கு போனது இதுக்குதானா? அட்லீ விட்டு விசேஷத்திலும் சர்ச்சை!

Advertisement

ரம்ஜானில் தாங்கள் மட்டும் நோன்பு துறந்து உணவு அருத்துவதை தவிர்த்து அனைத்து மத சகோதர சகோதிரிகளும் எங்களது ரம்ஜான் நிகழ்வில் மாற்றுமத சகோதரர்களுக்கும் விருந்து அளித்து இந்த நாளை கொண்டாடுவதாகவும்
தற்போது சிலிண்டர் தட்டுபாடு காரணமாக விறகின் விலை அதிகரித்த போதிலும் வழக்கம்போல் இந்த ஆண்டும் விலையேற்றத்தை பொருட்படுத்தாமல் தங்களுக்கு கிடைக்கும் பண உதவிகளை கொண்டு இதனை செய்ததாக தெரிவித்தார்.

இரவு முழுவதும் பிரியாணி சமைக்கும் பணிகள் நடைபெற்றது சுமார் ஆறுக்கும் மேற்பட்ட பெரிய பெரிய அண்டாக்களில் இந்த பிரியாணி உணவு தயார் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கோடை காலத்தில் வீட்டில் ஏற்படும் சூட்டை குறைக்க ஏற்படும் வழிமுறைகள்…!

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் மண்ணெண்ணய் குண்டு வீசிய கும்பலில் ஒருவர் கைது…

கோவை: கோவையில் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2 மாதங்கள் தலைமறைவாக இருந்த கும்பலில் ஒருவர் கைது செய்யப்பட்டார். காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசி 2...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.