இன்றைய ராசிபலன் | horoscope today

2 ராசிகளுக்கான இன்றைய ( 23.4.2026) ராசிபலனை இந்த தொகுப்பில் காணலாம்

மேஷம்
தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகள் இன்று வெற்றிப் பாதையை நோக்கி நகரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வர வேண்டிய நிலுவைத் தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் நடக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்
இன்று உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியமான ஒன்றாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காக்கப்படும். புதிய முதலீடுகளில் நிதானம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள்.

Advertisement

மிதுனம்
நீண்ட நாட்களாக தடைப்பட்ட காரியங்கள் இன்று சுலபமாக முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உற்சாகம் தரும். ஆன்மீக பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். மாலை நேரத்தில் பழைய நண்பர்களைச் சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்
வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு லாபத்தை ஈட்டுவீர்கள். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

NCC News Rasipalan today
NCC News

சிம்மம்
சமூகத்தில் உங்களுடைய கௌரவம் மற்றும் அந்தஸ்து உயரும். கடினமான பணிகளையும் மிக எளிதாக செய்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுபச் செய்திகள் வந்து சேரும். வாகனங்களை கையாளும் போது கூடுதல் கவனம் தேவை.

கன்னி
பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை உயர்த்துவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு நிம்மதியைத் தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையத் தொடங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

துலாம்
மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும் நாள். அரசாங்க ரீதியான உதவிகள் எளிதாகக் கிடைக்கும். புதிய வீடு அல்லது நிலம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தில் சிறு முன்னேற்றம் காணப்படும். பயணங்கள் அனுகூலம் தரும்.

விருச்சிகம்
வாழ்க்கை துணையின் ஆலோசனைகள் இன்று பெரிய அளவில் உதவி செய்யும். கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

தனுசு
இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் மிக முக்கியமான முடிவுகளை தள்ளி வைப்பது நல்லது. வாகன பயணங்களில் கூடுதல் விழிப்புணர்வு தேவை. பிறருடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். இறை வழிபாடு அமைதி தரும்.

மகரம்
தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான அறிகுறிகள் தென்படும். குழந்தைகளின் உடல் நலத்தில் அக்கறை காட்டவும். சுப விரயங்கள் ஏற்படும். வரவுக்கேற்ற செலவுகள் வந்து சேரும்.

கும்பம்
எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. புதிய ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். மனை வாங்கும் எண்ணம் நிறைவேறும். எடுத்த காரியங்களில் வெற்றி நிச்சயம்.

மீனம்
தடைகளைத் தகர்த்து முன்னேறும் ஆற்றல் இன்று உங்களுக்கு உண்டு. பொருளாதார ரீதியாக இருந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோக மாற்றங்கள் சாதகமாக அமையும். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video